இணையத்தில் நாம் தினமும் நிறைய இணையதளங்களை பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் இணையதளங்கள் வந்த வண்ணம் உள்ளன. கோடிக்கணக்கான இணையதள முகவரிகள் (Domain Name) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு உலகிலுள்ள அனைத்து இணைய தளங்களுக்கான தர வரிசை (rank) பட்டியலை கணக்கீடும் இனைய தளம் தான் Alexa.com இந்த இணைய தளத்தை பற்றி சில முக்கிய தகவல்களை இன்று தெரிந்து கொள்வோம்.
ஒரு இணையத்தின் அலெக்ஸா தரவரிசை என்பது குறிப்பிட்ட இணையதளத்திற்கு உள்ள வாசகர்களின் (visitors) எண்ணிக்கையை பொருத்தே அமைக்கிறது. அதிகமான வாசகர்கள் (visitors) கொண்ட இணையதளம் தான் முதலிடத்தில் இருக்கும். அதன் படி உலகின் முன்னனி தேடுதல் பொறியான கூகிள் தான் இந்த அலெக்ஸா தரவரிசையில் இன்றைய நிலைப்படி முதலிடத்தில் உள்ளது. சிறுது வருடங்களுக்கு முன்னாள் யாகூ (yahoo)தான் முதலிடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இணையத்தின் அலெக்ஸா தரவரிசை என்பது பார்க்கும் நாளிலிருந்து கடைசி மூன்று மாதங்களின் அடிப்படையில் அமைக்கிறது. மேலும் ஒரு மாதத்திற்கான அலெக்ஸா தரம், 7 நாட்களுக்கான அலெக்ஸா தரம், 1 நாளுக்கான அலெக்ஸா தரம் என்பவை குறிப்பிட்ட இணையதளத்தின் தரத்தை பொருத்து பார்க்க இயலும். மேலும் அலெக்ஸா ரெங்க்கில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதல் 100 இணையங்களை கூட பார்க்க இயலும். இந்தியாவின் முதல் 100 இணையதளங்களை காண, இங்கே கிளிக் செய்யவும்.
அலெக்ஸா இணையதளம் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் உலகளவிய தெரிந்திருத்தல் (Reach), தளத்தின் பக்கங்கள் பார்க்கபட்ட விதம் (pageviews), ஒரு வாசகர் பார்த்த மொத்த பக்கங்களின் விதம் (pageviews/user) போன்ற விவரங்களையும் தருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பற்றிய உங்களது கருத்துக்களை (reviews) தெரிவிக்கவும் முடியும். Saranr.in பற்றிய உங்களது கருத்துகளை தெரிவிக்க, இங்கே கிளிக் செய்யவும்.
அலெக்ஸா ரெங்க் எப்படி வேலை செய்கிறது.?
இந்த அலெக்ஸா ரெங்க் எப்படி வேலை செய்கிறது. என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?. அலெக்ஸா டூல்பார் (toolbar) என்ற ஒன்றை அலெக்ஸா நிறுவனம் தருகிறது. மேலும் மேலோடிகளை (Browsers) பொருத்து அதற்க்கு தகுந்த Add-ons வெளியிட பட்டுள்ளது. இந்த டூல்பார் மற்றும் Add-ons பயன்படுத்துபவர்கள் பார்க்கும் விவரங்களை வைத்துதான் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு அலெக்ஸா ரெங்க் கணிக்கப்படுகிறது. எனவே அலெக்ஸா ரெங்க் என்பது மிக சரியான இணைய தரவரிசை பட்டியல் என்று கூற முடியாவிட்டாலும் இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் இதுவே ஒரே வாய்ப்பாக கருதப்படுகிறது. அலெக்ஸா ரெங்க் போல் வேறு சில தரபட்டியல்கள் இருப்பினும் அவை அலெக்ஸா அளவிற்க்கு கூட சரியான பட்டியலை தருவதில்லை என்பது கூடுதல் தகவல்.
அலெக்ஸா ரெங்க் பற்றிய உங்களது கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை எங்களுக்கு எழுதவும்.
அலெக்ஸா ரெங்க்கில் SaranR.in
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...
Google Adsense கணக்கை பெறுவதென்பது புதிதாக வரும் வலைப்பூ பதிவர்களுக்கு முன்பைவிட கடினமாக உள்ளது. இந்த பதிப்பில் உங்களுக்கான Google Adsense ஏன் கணக ...
நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்கபட்டதா? என தெரிந்து கொள்ள வேண்டுமா?.. இப்போது இதற்கும் ஒரு வழி உள்ளது. SpyPig என்பது ஒரு எளிமையான மற்றும் இலவசமா ...
கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட ...
உங்களுக்கான இலவச .com டொமைன் ஐ பதிய விரும்புபவரா நீங்கள்?, இதோ உங்களுக்கான வாய்ப்பு. ஆம் 1and1.com இப்பொழுது அளிக்கும் வாய்ப்புதான் இது. இந்த இந் ...



மிக்க நன்றி நண்பரே! ஒரு சிறு சந்தேகம் நம் இணையதளத்தை அதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி இணைத்த பிறகுதான் இந்த ரேங்கிற்குள் நம் இணையதளமும் வருமா?
[Reply]
Saran R Reply:
August 23rd, 2010 at 2:06 pm
@எஸ்.கே
///மிக்க நன்றி நண்பரே! ஒரு சிறு சந்தேகம் நம் இணையதளத்தை அதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி இணைத்த பிறகுதான் இந்த ரேங்கிற்குள் நம் இணையதளமும் வருமா////
இல்லை எஸ்.கே.
இதற்காக நீங்கள் எந்த ஒரு அக்கவுண்டும் தொடங்க வேண்டாம். இது தானே நடைப்பெறும்.
*உங்கள் manamplus இதில் 7 லட்சங்களில் தரவரிசை பெற்றுள்ளது.
[Reply]
உண்மையிலே மிகவும் உபயோகமான தகவல், ஒரு சிறு சந்தேகம், மொழி சார்ந்த ராங்கை எப்படி பார்ப்பது.
தகவலுக்கு நன்றி
[Reply]