உங்களது இணையதளத்தின் மூலம் சம்பாதிக்க?

குறிப்பு : நீங்கள் “வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி” என்ற பக்கத்தை படிகத்தவராய் இருப்பின், அந்த பதிவை முதலில் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

இதுவே பெரும்பாலும் அறியப்படும் இணையத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் வழிமுறை. இவ்வாறு நீங்கள் பணம் சம்பாதிக்க உங்களுக்கென்று தனி இணையத்தளம் ஒன்றை முதலில் உருவாக்கவேண்டும். இவ்விணையதளம் ஒரு குறிப்பிட்ட அல்லது பல்வேறு வகையான தகவல்களை கொண்டதாகவும் இருக்கலாம்.  உங்கள் இணையத்தளம்,  இலவசமாக வலைப்பூ சேவையை தரும் blogspot அல்லது wordpress போன்ற மற்ற இணையதளங்களின் உதவியோடு உருவாக்கபட்டிருப்பினும் கூட  இவ்வழிமுறையில் சம்பாதிக்கலாம்.

இவ்வாறு உருவாக்கபட்ட உங்கள் இணையதளத்தை முதலில் நீங்கள் Ad Networks எனப்படும் விளம்பர நிறுவன இணையத்தளத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உங்கள் இணையத்தின் தரம் மற்றும் செயலை பொருத்து உங்களுக்கான Publisher கணக்கு தரப்படும். உங்கள் கணக்கிற்கான விண்ணப்பத்தினை பதியும் முன் Ad Networks ன் Terms and condition பக்கங்களை தவறாமல் படித்து கொள்ளவும். பெரும்பாலான Ad Networks தீவிரவாத மற்றும் பாலியல் தொடர்பான பதிவுகள் உள்ள இணையத்திற்கு Publisher கணக்கினை  தருவதில்லை.  இவ்வாறு தரப்படும் Publisher கணக்கினுள், உங்களின் இணையதிலுருந்து நீங்கள் பெறப்பட்ட தின மற்றும் மாத வருவாய், உங்கள் இணையத்தில் போட வேண்டிய விளம்பரங்களின் விபரங்கள் மற்றும் பல உங்கள் வசதிக்காக கொடுக்கபட்டிருக்கும்.

இவ்வழிமுறையில் உங்களின் வருமானம் என்பது பெரும்பாலும் உங்களின் இணைய வாசகர்களின் எண்ணிகையை பொறுத்தே அமையும். இதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு. ஒன்று, CPC எனப்படும் Cost per Click (ஒருமுறை விளம்பரம் கிளிக் செய்யப்படும் வருவாய்) வகை. இது உங்களின் இணையத்திலுள்ள விளம்பரதாரர்களின் விளம்பரத்தினை உங்கள் இனைய வாசகர்கள் கிளிக் செய்யும் போது உங்களுக்கு கிடைக்கும் வருவாய்.  மற்றொன்று CPM எனப்படும் Cost per Impression (ஆயிரம் வாசகர்களுக்கு விளம்பரங்களை கண்பிற்பதர்கான வருவாய்). இவ்வகையில் உங்கள் வாசகர்கள் விளம்பரங்களை கிளிக் செய்யாவிடிலும் உங்களுக்கு வருவாய் நிச்சயம். ஆனால் CPC வகைகளே அதிகமான  Ad Networks நமக்களிகின்றன.

முக்கிய அறிவிப்பு : இம்முறையில் உங்களது இணைய விளம்பரங்களை நிங்களே கிளிக் செய்யும் பட்சத்தில் உங்கள் Publisher கணக்கு துண்டிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

சில முக்கியமான Ad Networks இணையதள முகவரி உங்களுக்காக, Google AdsenseAxilclicksorAdbride



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



18 Responses to “உங்களது இணையதளத்தின் மூலம் சம்பாதிக்க?”

  1. priya

    நான் இலவச .காம் domine பதிவு ஏப்படி செய்வது

    [Reply]

    Saran R Reply:

    இலவச .காம் டொமைன் பதிவு பற்றி நான் எழுதியுள்ளேன். இனைப்பு இதோ,
    http://saranr.in/ilavasa-com-domainai-pathiya-oru-vaaippu/

    [Reply]

  2. ஆனந்தபாண்டியன்

    உபயோகமான தகவல்

    உங்கள்,
    ஆனந்தபாண்டியன்

    [Reply]

  3. எல்லோருக்கும் தேவையான ஒன்றை தந்ததற்கு நன்நி

    [Reply]

    Saran R Reply:

    உங்கள் கருத்திற்கு நன்றி மதிசுதா,

    [Reply]

  4. ganesan

    ஹாய் சரண் எனக்கு ஷேர் மார்க்கெட் டெடைல்ஸ் தேவை ப்ளீஸ்

    [Reply]

  5. R CHANDRASEKARAN

    Dear saran it was very useful information. Here I have some queries regarding online jobs. Offently I’m receiving email regarding online jobs like online survey, work for MNC’s & SMS based jobs. For doing this online jobs, they are asking to buy a jobs package which includes CD Kit, Unique Registration IDs, Access to all the programs, Audio-Video Demo, Member Support ID and Quick Start Procedure. The cost of this package comes around Rs.1000. So, I just request you to give your comments on this. Thank you

    [Reply]

    Saran R Reply:

    திரு. சந்திரசேகரன்,

    ஆன்லைன் வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை உங்களிடம் இருந்து முன் பணம் கேட்கும் எந்த ஒரு வேலையையும் நம்பவேண்டாம். வேலை இருக்கிறது என்பதற்க்காக ஆட்களை தேடுபவர்கள் ஆட்கள் கிடைத்தால் போதும் என்று தான் எண்ணுவார்கள் தவிர முன்பணம் கேட்கமாட்டார்கள். இந்த 1000 ரூபாய் முன் பணம் கேட்பவர்களாக உங்கள் வேலைக்கு 10000, 20000, 50000 என தர போகிறார்கள், சிந்தியுங்கள்.!

    உண்மையில் நிறைய பணமீட்டும் ஆன்லைன் வேலைகளுக்கு முன் பணம் எதும் தேவையில்லை, உங்களின் உழைப்பும், வேலை சார்ந்த அறிவும் தான் முக்கியம் என நான் நினைக்கிறேன்.

    [Reply]

    CHANDRASEKARAN Reply:

    மிக்க நன்றி திரு.சரண்

    [Reply]

  6. ரவிக்குமார்

    திரு.சரண், அவர்களுக்கு, எனக்கு கணினி அறிவு குறைவு.என்னாலும் இணையதளம் உருவாக்கி,சம்பாதிக்க முடியுமா?

    [Reply]

  7. ayyanar

    ஒண்லினே ட்ட என்ட்ரி வொர்க் பத்தி சொலுங்க சரண் ப்ளீஸ்

    [Reply]

  8. வணக்கம் ,உங்கள் பதிவு மிக அருமை …எல்லோருக்கும் பயனுள்ள தக உள்ளது.நானும் என் நண்பர் சொன்ன advartaisment i என்னுடைய blog il போட்டேன் .ஆனால் அது cost per click முறை ..அந்த advertaisment i நம் வாசகர்கள் click செய்து பொருட்கள் வாங்கினால் மட்டுமே நம்மக்கு சிறிது தொகை கிடைக்குமாம் . இது மிக கடினம் தானே. ஆனால் cpm என்று நீங்கள் சொல்லி இருந்திர்கள் .அது எப்படி பெறுவது என்று எனக்கு விளக்கமாக கூற முடயும?அந்தந மூலம் எவள்ளவு சம்பாதிக்க முடியும் ?.நன் கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன் .அனால் யாரும் சரியாக சொல்வதில்லை.movie ,serial எல்லாம் போடுகிறார்கள் .ஆனால் அது தவறுதான் ..ஆனால் பழைய நல்ல படங்கள் நம் netil நிறைய முறை தேட முயற்சி செய்கிறோம் . nalla comedy ,children program songs போடலாம் என்று நினைக்கிறன் .அதிலாவது நல்ல வருவாய் இட்ட முடயும? ஏன் என்றால் இந்த சின்ன தொகை கூட என் குடும்பத்தின் கஷ்டத்தை போக்கும் என நம்புகிறேன்.முடிந்தால் cpm கணக்கை பெறுவது எப்படி என்றும்,பழைய படங்கள் ,பாடல்கள் ,குழந்தைகளுக்கான தளங்கள்,போட்டால் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற முறையையும் எனக்கு கூறவும் .இதில் en mail id உள்ளது .please help me.

    [Reply]

  9. ஹாய் சரண் சார் எனக்கு ஆன்லைன் ஜாப்ஸ் ல இருந்து deta என்ட்ரி காண வேலை வரும் பட் அங்க முதல்ல பணம் கட்ட solranggaa சோ ந இதை நம்பலாமா அதை பத்தின கரெக்ட் details அனுப்ப முடியுமா சரண் சார் ப்ளீஸ்

    [Reply]

  10. gunvar

    நான் கூகிள் அட்சென்ஸ் கணக்கு வைத்துள்ளேன் .அசில் ,அட்ப்ரிடே.விளம்பரங்களை போடுவதால் அட்சென்ஸ் கணக்கு கட்டாகி விடுமா ?ஏன் அட்சென்ஸ் ஹெச் டிஎம் எல் ஐ பேஸ்ட் செய்ய சொல்கிறார்கள் .

    [Reply]

  11. Sathya

    ஹாய் சரண் நான் உங்கள் பகுதில் கேள்வி பதில் எல்லாம் ரொம்ப நாளாக படித்து வருகிறேன் நன்றாக உள்ளது . நான் வோர்ட் பிரசில் ஒன்று தொடங்கி உள்ளேன் . அதில் விளம்பர கோடு ( generate code ) காப்பி பேஸ்ட் எங்கு பண்றதுநு கொஞ்சம் சொல்லுங்களே ப்ளீஸ் …………

    சத்யா…..

    [Reply]

  12. sathyaraj

    சத்யராஜ்
    ஐயா நீங்க எழுதிய ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி படித்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது .

    [Reply]

  13. fathima

    ஆன்லைனில் டியூஷன் எடுப்பது எப்படி?
    நான் வீட்டில் இருந்தே ஆன்லைனே டியூஷன் முலம் சம்பதிக்க்கலாமா?

    [Reply]

Trackbacks/Pingbacks

  1. வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரு முன்னோட்டம் | Saranr.in - June 16, 2010

    [...] [...]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)