கூகிள் அட்சென்ஸ் விளம்பரங்களின் புது தோற்றம்

ஆன்லைனில் பணமீட்ட நிரைய வழிகள் இருந்தாலும் (வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரு முன்னோட்டம் என்றபதிவில் ஆன்லைனில் பணமீட்டும் வழிகள் பற்றி எழுதியுள்ளேன்), கூகிள் அட்சென்ஸ் தான் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. கூகிள் அட்சென்ஸ் மூலம் பணமீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே வருகிறது. இணைய தளங்களிலுள்ள கூகிள் அட்சென்ஸை வாசகர்கள் கிளிக் செய்தால் தான் அந்த இணைய தள உரிமையாளருக்கு அதற்கேற்ப பணம் கிடைக்கும். சமிப காலமாக கூகிள் அட்சென்ஸ் மூலம் பணமீட்டுபவர்களின் பெரும் குறைய இருந்தது என்னவேனில் கூகிள் அட்சென்ஸ் டிசைன் மிகவும் பழக்கப்பட்ட மற்றும் அனைவரும் அறிய கூடிய வகையில் இருப்பதால் கிளிக் பெறுவது மிகவும் கடினம் என்பது தான். இதை உணர்ந்த கூகிள், அட்சென்ஸ் விளம்பரங்களில் சில வித்தியாசங்களை கொண்டுவர முயற்சி மேற்கொண்டிருக்கிறது. அதன் விளைவே இந்த புது தோற்றங்கள்.

கூகிள் அட்சென்ஸில் பல தரப்பட்ட விளம்பர அளவுகள் உள்ளன. ஆனால் குறிப்பாக அதிக கிளிக் பெற கூடிய அளவாக கருதப்படும் 728×90, 300×250, 336×280 போன்ற அளவுள்ள விளம்பர தோற்றங்களை மட்டும் கூகிள் மாற்றி உள்ளது. இதனால் கிளிக் பெறும் விகிதம் எனப்படும் click through rate (CTR) அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. உண்மையில் இது வரவேற்க்க தக்கது. ஆனால் என்னை பொருத்தவரையில் இது மட்டும் போதது கூகிள் இணையதள உரிமையாளர்கள் விருப்பத்திற்கு எற்வாறு விளம்பர அளவுகளை வடிவமைத்து கொள்ளும் வாய்ப்பை தந்தால், இணையதள உரிமையாளர்கள் அதிகம் பயன் பெருவார்கள்.

கூகிள் அட்சென்ஸில் புதிதாக அறிமுகமான விளம்பர தோற்ங்களின் படங்கள்

கூகிள் அட்சென்ஸ் விளம்பரங்களின் புது தோற்றம் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



No comments yet.

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)