Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/techbee/public_html/blog/wp-content/themes/smartblog/includes/widgets/widget-social.php:1) in /home/techbee/public_html/blog/wp-content/plugins/wp-greet-box/includes/wp-greet-box.class.php on line 496
கூகிளில் நாறும் அரசியல் தலைவர்கள்! | Saranr.in

கூகிளில் நாறும் அரசியல் தலைவர்கள்!

கூகிள், இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகளின் இணைய தரவரிசை பட்டியலில் முதலில் இருக்கும் இணையதளம் இது. கூகிளின் உதவியோடு தான் பல நண்பர்கள் தங்களது வேலைகளை திறம்பட செய்துவருகின்றனர். குறிப்பாக கணினி தொழில்நுட்ப வேலைகள் செய்பவர்கள்.  அதில் நானும் ஒருவன். கூகிள் தேடுதலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் தேடல் பரிந்துரைகள் (search suggestions) எனப்படும் வசதி. கூகிள் தேடலில், தேடப்படும் வாக்கியத்தின் ஒரு பகுதியை தட்டச்சு செய்தவுடன் மீதி வாக்கியம் பரிந்துரை செய்ப்படுகிறது. இந்த பரிந்துரைகள் இதற்க்கு முன் அதிகமாக தேடப்பட்ட வாக்கியங்களின் அடிப்படையில் காண்பிக்கப்படுகிறது. உண்மையில் இது கூகிளை பயன்படுத்தி தேடுபவர்களுக்கு உதவியாக உள்ள ஒரு வசதி தான்.

ஆனால் இப்போ சிக்கலே இதுல தான். கூகிளில் தேடப்படும் அல்லது அதிகம் பார்க்கப்படும் வாக்கியங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களும் அவர்களை சார்ந்த செய்திகளும் மிக முக்கியமான ஒன்று. இவ்வாறு அதிகம் தேடப்படும் அல்லது பார்க்கப்படும் வாக்கியங்களில் சிலவற்றை தேடும் போது தான் தெரிகிறது அதில் அரசியல் தலைவர்களின் கதி.

கூகிள் தேடலில் இந்திய அரசியல் தலைவர்களின் பெயர்களை தட்டச்சு செய்து பின் “is a ” என்று சேர்க்கும் போதே மற்ற தேடல்களுக்கு வருவதை போல் தேடல் பரிந்துரைகள் வருகிறது. அதில் பெரும்பாலும், அரசியல் தலைவர்களை பற்றி வரும் தேடல் பரிந்துரைகள் மிகவும் கொச்சையான வார்த்தைகளாகவே உள்ளது. சில அரசியல் தலைவர்களை பற்றி நான் தேடியபொழுது வந்த தேடல் பரிந்துரைகளை கீழே படத்தில் காணலாம். இதில் தமிழக அரசியல் தலைவர்களும் தப்பவில்லை. அது இன்னும் மோசமாக உள்ளது. அவற்றை நான் இங்கே இணைக்கவில்லை. (நான் இணைக்கவில்லை என்றால் மட்டுமென்ன நீங்கள் கூகிள் தேடலில் பார்க்கமாட்டிங்களா என்ன?).

 

 

சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் சென்ஸார்?! என்று நான் எழுதிய பதிவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும், அதில் சமூக வலைதளங்கள் பின்பற்றவேண்டிய விதிகளாக இந்திய அரசு எடுத்துரைத்ததை பற்றி எழுதி இருந்தேன். விரைவில் அந்த பட்டியலில் இந்த கூகிள் தேடல் பரிந்துரைகளும் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இதை பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை comment செய்யவும்.



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



25 Responses to “கூகிளில் நாறும் அரசியல் தலைவர்கள்!”

  1. Anjanenjan

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் சார்,

    [Reply]

  2. Vairamani

    நிறைய எழுதுங்கள்.

    [Reply]

  3. Adalezhilan

    சூப்பர் ப்ளாக்!!!

    [Reply]

  4. Uzhimudhalvan

    இந்த பதிவு, கூகிளில் நாறும் அரசியல் தலைவர்கள்! நல்ல இருக்கு.

    [Reply]

  5. Mukkani

    இதை போலவே நிறைய எழுதுங்கள்,

    [Reply]

  6. Manvizhi

    [Reply]

  7. Minnalkodi

    அட இது நல்ல இருக்கே?!

    [Reply]

  8. Unarvendhi

    இணையம் பகுதியில் உள்ள பதிவுகளை மட்டும் எப்படி பார்ப்பது.

    [Reply]

  9. Agamudainambi

    ஒகெ ஒகெ

    [Reply]

  10. Ulloli

    நல்லாயிருக்கு..

    [Reply]

  11. Minnal

    ஹலொ பாஸ் கலக்கிரிங்க!

    [Reply]

  12. Uzhimudhalvan

    கூகிளில் நாறும் அரசியல் தலைவர்கள்!, எங்க இருந்து இந்த மாதிரி டைடில் வைக்கீரிங்கலோ?

    [Reply]

  13. Anjanenjan

    அனைத்தும் நன்றாக உள்ளது.

    [Reply]

  14. Venil

    நல்ல பதிவு..வாழ்த்துக்கள்

    [Reply]

  15. Minnal

    புதுசா இருக்கே?!

    [Reply]

  16. Minnalkodi

    இணையம் பற்றி நிறைய எழுதுங்கள்.

    [Reply]

  17. Vairamuthu

    கூல் பொஸ்ட்!

    [Reply]

  18. Vairamuthu

    இதுல இப்டி ஒன்னு இருக்கா?

    [Reply]

  19. Uzhimudhalvan

    கொஞ்சம் இன்ன்னும் விரிவா எழுதி இருக்கலாம்.

    [Reply]

  20. Minnalkodi

    உங்களது பழய பதிவுகளை படிப்பது எப்படி

    [Reply]

  21. kalpana

    உண்மையில் மக்கள் மனசு என்னன்னு குகுலுக்கு தெரியாத என்ன?

    [Reply]

  22. ராஜ்

    ஏன் தமிழ் அரசியல் வியாதிகளை விட்டுடிங்க சார்?!

    [Reply]

  23. Agamudainambi

    ஹாய், உங்களது இணையதளம் சூப்பர்.

    [Reply]

  24. Sairam

    நன்று

    [Reply]

  25. selvaraj

    அற்புதம் மிக்க நன்றீ

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)