இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்தபடி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி? என்று ஏற்கனவே நான் இந்த வலைதளத்தில் எழுதியுள்ளேன். அந்த பதிவு, இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என தேடுபவர்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் இணைய வேலைகளில் ஏற்படும் சிக்கல்களையும், அதில் இருக்கும் சில அசாதரண நிலைகளை பற்றியும் அந்த பதிவில் எழுதியுள்ளேன். நீங்கள் அதை படிக்கவில்லை என்றால், அதை படித்துவிட்டு, இந்த பதிவை தொடருவது நலம். அந்த பதிவிற்க்கு பிறகு மிக நீண்ட நாட்களாக இணையத்தில் சம்பாதிப்பது எப்படி? என்பதை பற்றிய ஒரு தொகுப்பை எழுத நினைத்து, இப்பொழுது இந்த பதிவிலிருந்து அதை தொடங்கியுள்ளேன்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது ஏதோ மிகவும் சுலபமானது என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், அதை தூக்கி எறிந்துவிட்டுங்கள். மற்ற அனைத்து வேலைகளில் இருக்கும் சிரமங்களை போல், ஏன் அதை விட அதிகமாகவே இது கடினம் தான். ஆனால் இவ்வகை இணையவேலைகளில் சில நன்மைகளும் உண்டு. நமக்கு தகுந்த நேரத்தில் வேலைகளை செய்து கொள்வது, யாருக்கும் கட்டுபட்டு இருக்கும் அவசியம் இல்லாதது, இன்னும் சொல்லபோனால் முழு நேர வேலைகளை விட அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு போன்ற சில நன்மைகள் தான் அவற்றில் ஒரு சில. இதனால் தான் சிலர் தனது முழுநேர வேலையில் இருக்கும் போதே இவ்வகை இணையத்தில் சம்பாதிக்கும் வழியை தேடிவருகின்றனர்.

என்னை பொருத்தவரை இணையத்தில் சம்பாதிப்பதை இரண்டு வகையாக பிரிப்பேன். அதில் முதலாவது ஆன்லைன் வேலைகள் (Online Jobs), மற்றொன்று ஆன்லைன் பிஸினஸ் (Online Business). இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லாததை போல் தோன்றும், ஆனால் இரண்டிற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எப்படி என்றால் ஒருவர் வேலைக்கு செல்வதற்கும் தொழில் செய்வதற்க்கும் உள்ள வேறுபாட்டை போன்றது தான் அது.

ஆன்லைன் வேலைகள் (Online Jobs)
ஆன்லைன் வேலைகள் (Online Jobs) என்பதை இணையத்தில் மற்றவர்களுக்காக வேலை செய்யும் முறை என்றும் சொல்லலாம். இம்முறை என்பது அலுவலகத்திற்க்கு செல்லாமல் மற்றபடி அலுவலக வேலைகளை போன்றதே, இதில் உங்கள் திறமைகளுக்கேற்ப, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, வேலைகளை தரும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து வேலைகளை பெற்று அதை தகுந்த முறையில் செய்து பணம் ஈட்டுவது. இதை நீங்கள் முறைபடுத்துவதன் மூலம் இதனை உங்களின் தொழிலாகவும் ஆக்க முடியும். இந்த வகையில் நீங்கள் செய்யும் வேலைகளின் திறன் மற்றும் வேலை செய்யும் நேரம் போன்றவற்றை முறையிட்டு அதன் அடிப்படையில் உடனுக்குடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற்க்குள் அதற்கான வருமானத்தை பெறலாம்.

ஆன்லைன் பிஸினஸ் (Online Business)
ஆன்லைன் பிஸினஸ் என்பது, மற்ற பிஸினஸ் போலவே தான், எப்படி ஒரு தொழிலில் நீங்கள் செய்யும் நேரத்தை பொருத்து அதன் வருமானத்தை தீர்மானிக்க முடியாதோ அதை போலவே இதில் நேரம் மட்டும் முக்கியமானதல்ல, நீங்கள் செய்யும் வேலையின் தன்மை மற்றும் அதன் சாதனைகள் தான் முக்கியம். இம்முறையில் உங்களின் உழைப்பின் பயனை அடைய சிறிது காலம் ஆகலாம், ஏன் அடைய முடியாமலும் போகலாம், ஒரு தொழிலில் எப்படி லாபம் நஷ்டம் சகஜமோ அதை போலவே ஆன்லைன் பிஸினஸிலும். ஆனால் இதில் நஷ்டம் என்பது பெரும்பாலும் நீங்கள் அதற்கு செலவு செய்த நேரமாக இருக்கலாம். ஆனால் இம்முறையில் சாதிக்கும் பட்சத்தில், நீங்கள் தூங்கும் போதும், இத்தொழில் உங்களுக்காக பணமீட்டி கொண்டிருக்கும் என்பதையும் சொல்லவிரும்புகிறேன்.

உதாரணத்திற்க்கு சொல்லவேண்டுமென்றால்,

ஒருவர் ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபர் ஒருவருக்கோ இணையத்தில் அவர்களுக்கு தேவையான வேலையை செய்து கொடுத்து அதன் மூலம் சாம்பதிக்கலாம் இதனை ஆன்லைன் வேலை என்கிறோம். இதில் செய்யும் வேலையின் கால அளவு அல்லது வேலையின் அளவை பொருத்து உங்களுக்கான வருமானம் இருக்கும்.

 

ஒருவர் ஒரு இணையதளத்தை அமைத்து அதனை பிரபலப்படுத்தி, அதில் விளம்பரங்களை பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம். இதில் விளம்பர வருமானம் பெற இணையதளத்தை அமைக்கவேண்டும், அதை பிரபல படுத்த வேண்டும், விளம்பரத்தை பெற வேண்டும், இவை அனைத்தும் செய்து வருமானம் பெறுவதால் இதை ஆன்லைன் பிஸினஸ் எனலாம்.

ஆன்லைன் வேலை மற்றும் தொழிலை இப்படியும் சொல்லலாம். அதாவது, தேவைக்களுக்கு (requirement) ஏற்ப வேலை செய்து தருவதை ஆன்லைன் வேலைகள் எனவும், வேலையை செய்துவிட்டு அதனை கொண்டு பணம் சம்பாதிக்கும் முறையை ஆன்லைன் பிஸினஸ் எனவும் கூறலாம்.

இவ்விரண்டு முறையிலும் பல்வேறு வகையில் பணமீட்ட வழிகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவுள்ளேன். ஓவ்வொரு பணமீட்டும் வழி பற்றி எழுதும் பொழுதும் இந்த பதிவில் கீழேயுள்ள பட்டியலில் இணைக்கப்படும். பதிவுகளை உடனுக்குடன் உங்கள் இமெயிலில் பெற பதிவு செய்துகொள்ளுங்கள்.

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிகள்:-

1.  ஈபேயில் (eBay) பணம் சம்பாதிப்பது எப்படி?

2. வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய?

3. உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் சம்பாதிப்பது எப்படி?

4. xxxx-xxxx-xxxx-xxxx

5. xxxx-xxxx-xxxx-xxxx

6. xxxx-xxxx-xxxx-xxxx

7.  xxxx-xxxx-xxxx-xxxx

8. xxxx-xxxx-xxxx-xxxx

9. xxxx-xxxx-xxxx-xxxx

10. xxxx-xxxx-xxxx-xxxx

and more…

visit this page daily for updates



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



21 Responses to “இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?”

  1. துவக்கம் சூப்பரா இருக்கு. ஆன் லைன்ல சம்பாதிக்க உள்ள வாய்ப்புகளை எழுதும் போதே அதில் உள்ள ரிஸ்கையும் அடுத்த பாராவுலயே கொடுத்துருங்க. நல்லாருக்கும்

    [Reply]

    Saran R Reply:

    கண்டிப்பாக எல்லா பணமீட்டும் வழிகளையும் பற்றி எழுதும் போதும் அதன் ரிஸ்கையும் எழுதுவேன் சார்.

    நன்றி
    சரண்

    [Reply]

  2. Senthil Kumar

    சார், சரியான கம்பெனி எப்படி செலக்ட் பண்றதுன்னு சொன்னா உபயோகமா இருக்கும். நன்றி!

    [Reply]

  3. selvaraj

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா….

    [Reply]

  4. வெப்சைட் பிரபலபடுத்துவது பற்றி சொல்லவும்.

    [Reply]

    Saran R Reply:

    கதிஜா,

    புதிதாக இதை பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதால், தொடக்கத்திலிருந்து வருகிறேன். சற்று காத்திருக்கவும். தொடர்ந்து படியுங்கள்.

    உங்கள் ஆதரவிற்கு நன்றி.

    சரண்

    [Reply]

  5. K.THINAKAREN

    டியர் Mr. சரண்,

    உங்கள் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற தகவலுக்கு மிகவும் நன்றி. நான் பலரிடமும் எப்படி என்ற கேள்வியை அனுப்பி பதில் பெற்றேன். ஆனால் அதில் திருப்தி தரும் பதில் எதுவும் இல்லை.
    ஆனால் உங்கள் மெயில் நான் எதிர்பார்த்த திருப்தியான பதிலை இப்போதே தரத்தொடங்கிவிட்டது.

    தொடர்ந்து மெயில் எனக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    K.THINAKAREN

    [Reply]

    Saran R Reply:

    வணக்கம் தினகரன்,

    இந்த இணையத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பதிவுகள் இடப்பட்டவுடன் இமெயில் சென்றுவிடும்….

    தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கு தேவையான தகவல்கள் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

    பேஸ்புக்கில் இந்த இணையத்தை தொடர, இடது புறத்தில் மேலேயுள்ள பேஸ்புக் லைக்கில் இணையலாம்.

    நன்றி
    சரண்

    [Reply]

  6. jasmine

    உங்களுடைய பழைய பதிஊகளை என் மெய்ல்ளுக்கு அனுப்ப முடியும்மா?

    [Reply]

    Saran R Reply:

    வணக்கம் ஜாஸ்மீன்,

    நான் உங்களுக்கு பதிவுகளை சேகரித்து உங்கள் இமெயிலிர்க்கு அனுப்புவது கடினம், ஆனால் அவற்றை அனைத்தையும் நீங்கள், என்னுடைய இணைய தளத்தில் http://SaranR.in சென்று பார்க்கலாம்.

    அதற்க்கு மூன்று வழிகள் உள்ளன.

    1. http://saranr.in முகப்பு பக்கத்தில் சமீபத்திய 10 பதிவுகளின் தொகுப்பு இருக்கும். அதற்க்கு முந்தைய பதிவுகளை பார்க்க, கீழேயுள்ள page number navigation ஐ பயன்படுத்தி அடுத்த பக்கங்களுக்கு செல்லலாம்.

    2. http://SaranR.in தளத்திற்க்கு சென்று, மேலேயுள்ள navigation ல் all topics என்று இருக்கும் அதன் மேல் mouse ஐ கொண்டு சென்றவுடன் பல்வேறு category தெரியும். அதில் உங்களுக்கு வேண்டிய category ஐ கிளிக் செய்ய, அந்த category ல் சமீபத்தில் இடப்பட்டிருக்கும் 10 பதிவுகள் ஒரு பக்கத்தில் தெரியும், அதே category ல் அதற்க்கு முந்தைய பதிவுகளை பார்க்க, கீழேயுள்ள page number navigation ஐ பயன்படுத்தி அடுத்த பக்கங்களுக்கு செல்லலாம்.

    3. http://saranr.in/sitemap/ இந்த பக்கத்தில் இதுவரை பதியப்பட்ட பதிப்புகளின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதிலும் ஒரே பக்கத்தில் எல்லா பதிவுகளும் தெரியாது. அதற்க்கு முந்தைய பதிவுகளை பார்க்க, கீழேயுள்ள page number navigation ஐ பயன்படுத்தி அடுத்த பக்கங்களுக்கு செல்லலாம்.

    இனிவரும் பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இமெயிலை பதிவு செய்து கொள்ளலாம்.

    பேஸ்புக்கில் இந்த இணையத்தை தொடர, இடது புறத்தில் மேலேயுள்ள பேஸ்புக் லைக்கில் இணையலாம்.

    [Reply]

  7. ஐயா, உங்களைத்தான் இவ்வளவு நாளா தேடிகிட்டிருந்தேன்!மிகவும் உபயோகமான விவரங்கள். எனக்கும் மெயில் அனுப்பவும்.நன்றி.
    ssr .sukumar

    [Reply]

    Saran R Reply:

    உங்கள் மறுமொழிக்கு நன்றி,

    பதிவுகளை இமெயிலில் பெற, உங்கள் இமெயிலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

    நன்றி
    சரண்

    [Reply]

  8. gowri balaji

    மதிப்பிற்குரிய சரண் சார் மற்றும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    [Reply]

  9. V. ANANTHA NARAYANAN

    Sir,

    How to earn money thro Website?

    [Reply]

  10. shiva

    சார்,
    நான் ஏதாவது ஆன்லைன வழியாக சம்பாதிக்க முடியுமா என்று பல முறை தேடி தேடி அலுத்து போன நேரத்தில் தான் உங்களின் இந்த பதிவு தென் பட்டது, எனக்கு ஓரளவு நம்பிக்கை தெரிகிறது .. , முழுவதும் படித்த பின் தான் என்னால் கருத்து சொல்ல முடியும் . உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

    [Reply]

    Saran R Reply:

    நன்றி சிவா,

    தொடர்ந்து படியுங்கள்,

    [Reply]

  11. SUSEE

    i AM HOUSEWIFE ,I CAN’T GO LEARNING CENTRE MAY I KNOW HOW CAN I LEARN DATA ENTRY IN ONLINE

    [Reply]

  12. SUSEE

    give me some data entry job websites

    [Reply]

  13. MIRRA

    ஹாய் சரண்,
    உங்க வெப்சைட் ரொம்ப ரொம்ப useful அ இருக்கு .really u r great
    நான் டெல்லி இல் இருக்கேன் எனால job போகமுடியாத situation .we r n need of money . எனக்கு வீட்டுல இருநது earn பண்ண வழி சொல்லுங்க சரண் ப்ளீஸ்

    [Reply]

  14. gopi

    ஹாய் சார், நான் இங்கிலீஷ் ட்ய்பிங் கிளாஸ் முடிச்சுடன்.. எனக்கு எந்த மதேறி வேலை வாய்ப்பு இருக்கும்….

    [Reply]

  15. Luris

    எப்படி வெப்சைட் உருவாக்கலாம்?. உங்க தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி .

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)