இந்திய ரூபாயின் புது குறியீட்டை தட்டச்சு செய்வதெப்படி?

இந்திய ரூபாய்க்கு புது குறியீடு? என்ற எனது பதிவை படித்திருப்பீர்கள். இன்று indian institute of technology ல் படிக்கும் மாணவர் திரு. டி. உதயா குமார் வடிவமைத்த குறியீட்டை இந்திய ரூபாயின் குறியீடாக இந்திய யுனியன் கபினெட் அறிவித்தது. ஆனால் இப்போது எல்லோர் மனதில் இருக்கும் குழப்பம் என்னவென்றால், இந்த இந்திய ரூபாயின் புது குறியீட்டை தட்டச்சு செய்வதெப்படி என்பது தான்.


இது ஒரு நாளில் நடக்ககூடிய காரியம் இல்லை. அம்பிகா சோனி அவர்கள் இந்த இந்திய ரூபாயின் புது குறியீட்டை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். மேலும் இந்த புதிய குறியீடு இந்தியா முழுவதும் பயன்படுத்தபடுவதற்கு ஒரு வருடத்திற்கு மேலாகும் எனவும், உலகம் முழுவதிலும் பயன்படுத்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இனையதள பயன்பட்டிற்கு வர, the Unicode Consortium’s Unicode Technical Committee யின் ஒப்புதல் பெற வேண்டும். இவர்கள் தான் யுனிகோட் அமைப்பிற்கு பொறுப்புவகிக்கின்றனர். இந்தியா இந்த யுனிகோட் அமைப்பில் உறுப்பினராயிருப்பதால், இதற்கு மிக கடினமாயிருக்காது.

யுனிகோட் தொழில் நுட்ப குழு காலாண்டிற்கு ஒரு முறை கூடும். இதன் அடுத்த கூட்டம் வரும் அக்டோபரில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் இந்திய அரசங்கம் கணினி பாகங்கள் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு இந்த குறியிட்டை புதிதாக தயாரிக்கும் தட்டச்சு பலகைகளில் பொருத்த ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இதற்கும் யுனிகோட் அமைப்பின் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிகிறது.

ஆனால் அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது. விரைவில் typographers இந்த குறியீட்டை இனைத்த font ஐ வெளியிட்டுவிடுவார்கள். ஆனால் இவர்கள் வெளியிடும் இந்த font உலகம் முழுவதிலும் பயன்படுத்த முடியுமா? என்பது கேள்வி குறி தான்.

online font-creation tools ஐ கொண்டு உங்களுக்கான font ஐ நீங்களே உருவாக்கலாம் என்பது கூடுதல் தகவல்.



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



No comments yet.

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)