இந்தியாவில் அமேசான் காடு?!

அமேசான் நிறுவனம் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவில் தனது ஆன்லைன் வியாபார சந்தையை junglee.com என்ற இணைய முகவரியில் துவக்கியுள்ளது. இந்த புதிய சந்தை அமேசான் சந்தை போல் இல்லாமல், (பொதுவாக அமேசான் சந்தையில் அவர்களது பொருட்களை மட்டுமே வாங்க முடியும்). இந்தியாவில் உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்களும் தங்களது தயாரிப்புகளை விற்கும் சந்தையாக இருப்பது சிறப்பு.

தயாரிப்புகளை Junglee.com ல் வாங்குகிறீர்கள் என்றால், அமேசானில் வாங்குவதை போல் அல்லாமல் (அநேகமாக நம் நாட்டில் அன்னிய நேரடி முதலீடு விதிகளை கருத்தில் கொண்டு) நீங்கள் விற்பனையாளரின் இணையதளத்திற்கு திருப்பிவிடப்படுவீர்கள். விற்பனை சார்ந்த அனைத்தையும், உதாரணத்திற்க்கு பொருட்களை அனுப்புதல், பணத்தை திருப்பி செலுத்துதல், வருமானக் கொள்கைகளை பின்பற்றுதல் போன்றவற்றை தனிப்பட்ட விற்பனையாளர்களே கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஆகையால், இந்த நேரத்தில், இந்தியாவில் அமேசான் பெரும்பாலும் ஒரு ஒப்பீடு ஷாப்பிங் இயந்திரம் போலவே இருக்கிறது. மேலும் அமேசானில் பயன்படுத்துவதை போல் யூனிவர்சல் சாப்பிங்க் கார்டுகளை பயன்படுத்த முடியாது.

இதில் சந்தோசமான விடயம் என்னவென்றால், இந்தியாவில் அதிகம் தெரியப்படாமலிருந்த சில தயாரிப்புகளையும் அதன் நிறுவனங்களையும் இதில் மக்கள் அறிந்துகொள்ளலாம்.



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



4 Responses to “இந்தியாவில் அமேசான் காடு?!”

  1. தகவலுக்கு நன்றி சார் !

    [Reply]

    Saran R Reply:

    திரு தனபாலன், நீங்கள் என் இணையதளத்திற்க்கு தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்க்கு மிக்க நன்றி…

    [Reply]

  2. Rajasekar

    மிகவும் உபயோகமான செய்திகள் அளித்துவரும் சரணுக்கு நன்றி .

    [Reply]

  3. ramamurthy

    மிகவும் நன்றாக உள்ளது

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)