முக்கியமான கோப்புகளை (files) மற்றவர்களுடன் விரைவாக பகிர்ந்து கொள்ள, இமெயிலில் அட்டாச் (attach) செய்து அனுப்பலாம் அல்லது கோப்புகள் பெரியதாக இருப்பின் உங்களின் hosting சேவையில் கோப்புகளை தரவேற்றம் செய்து லிங்கை பகிர்ந்து கொள்ளலாம்.
IM எனப்படும் Skype, Google Talk மற்றும் Yahoo Messanger போன்றவைகளும் கோப்புகளை மற்றவர்களுடன் விரைவாக பகிர்ந்து கொள்ள உதவுகின்றன. இந்த வகையில் அனுப்பப்படும் கோப்புகளுக்களின் size ஒரு பொருட்டில்லை. இவை இமெயிலில் அட்டாச் செய்தனுப்பும் முறையை விட எளிது, ஆனால் இவற்றில் பெரும் சிக்கல் கோப்புகளை அனுப்புபவரும், பெருபவரும் ஒரே நேரத்தில் இணையதில் இந்த IM சாப்ட்வேரை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், ஒரு வித்தியசமான மற்றும் எளிதான வழி ஒன்று உள்ளது அது தான் iSendr. இதில் நீங்கள் பயன்படுத்தும் Browser வழியாகவே உங்கள் கோப்புகளை மற்றவருக்கு அனுப்பலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்போம். நீங்கள்(அனுப்புநர்) உங்கள் கோப்பை தரவேற்றம் செய்யும் படி செய்த உடன் உங்களுக்கு ஒரு சிறப்பு private லிங்க் கிடைக்கும். அதை மற்றவர்களுடன் நீங்கள் தொலைபேசியிலோ அல்லது சிறு message முலமாகவோ பகிர்ந்து கொண்டு, அவர்கள் அந்த கோப்புகளை குறிப்பிட்ட லிங்க்கில் பெற்று கொள்ளலாம்.
இந்த வகை கோப்பு பகிர்தலில் இருக்கும் நன்மை என்னவெனில், இமெயிலிலோ அல்லது மற்ற மூன்றாம் தர server களில் உங்கள் முக்கிய கோப்புகளை தரவேற்றம் செய்யாமல், மற்றவர்களுடன் விரைவாக பகிர்ந்து கொள்ளலாம். மேலும் உங்கள் நண்பரால் கோப்பு தரவிறக்கம் செய்யப்பட்டவுடன் கோப்புகள் அழிக்கப்பட்டுவிடும்.
Popularity: 2% [?]
தொடர்புடையவை :
Password னா எப்படி இருக்கனும்? என நான் எழுதி இருந்த பதிவை படித்திருப்பீர்கள். அதில் உங்கள் கடவுசொல்லை (Password) எப்படி அமைக்க வேண்டும் என்பதையும ...
பெரும்பாலும் ஒரு சில வார்த்தைகளையே பலர் தங்களின் கடவு செற்களாக (passwords) பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கடவுச்சொற்கள் (passwords) எளிதாக மற்று ...
வீட்டிலிருந்த படி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி? நீங்கள் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புபவரா?. இணையத்தில் பணம் சம்பாதிப்பது ...
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் கூகிள் மற்றும் யாகூ போன்ற இனையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது என எழுதி இருந்தேன். இப்பொழுது இந்தியாவில் கூகிள் த ...
கூகுள் க்ரொம் (google Chrome) ஒரு மிக சிறந்த மேலோடி (Browser). க்ரொமின் அதி சிறந்த வேகம் மற்றும் அதன் எளிமையான உபயோகிக்கும் முறையும் அனைவரையும் கவ ...



ஆனால் இதற்கும் ரேபிட்ஷேர் மெகாஅப்லோட் போன்றவைகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
[Reply]