இந்த நவீன உலகத்தில் புதிய கண்டிப்பிடிப்புகள் நமக்கு உதவியாக இருப்பதை விட தொல்லையாக இருப்பதை தான் நாம் அதிகம் உணருகிறோம். இவ்வகை கண்டுப்பிடிப்புகளில் வருங்காலங்களில் முக்கிய இடத்தை வகிக்க போவது மறைமுக கேமராக்கள் என்றால் அது மிகையில்லை. மறைமுக கேமராக்கள் சில கடைகள், அலுவலங்கள் போன்ற பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதே மறைமுக கேமராக்கள் பல தவறானவற்றிற்க்கும் பயன்படுத்தப்படுக்கின்றன. மறைமுக கேமராக்களை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை நீங்கள் படித்திருக்கக்கூடும்.
மறைமுக கேமராக்களை கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதன் விலையும் கூட. இவ்வித மறைமுகமான கேமராக்கள் இந்தியா மதிப்பில் ரூபாய் 1000 த்திற்க்கேல்லாம் (இதை விட குறைவாகவும்) கிடைக்கிறது. எல்லா பொருட்களையும் மிக குறைந்த விலையில் தயாரித்து விற்க்கும் சினாவே இவற்றையும் குறைந்த விலைக்கு செய்கிறது.
சரி, உங்களை சுற்றி மறைந்திருக்கும் மறைமுக கேமராக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?.
இந்த வகை மறைமுக கேமராக்களை விற்ப்பவர்களே, அதற்க்கான தீர்வையும் தருகிறார்கள், (virus ஐ உருவாக்கி அதை சரிப்படுத்த antivirus மென்பொருட்களை விற்பதை போன்றது தான் இது) அது தான் “Spy camera Detector”. இதன் உதவியோடு உங்களை சுற்றி இருக்கும் மறைமுக கேமராக்களை அறிந்து கொள்ள முடியும். இதை வாங்கி உங்கள் அலுவலகத்திலோ அல்லது விட்டிலோ அல்லது தேவையான இடத்தில் பொருத்தி விட்டால் போதும் மறைமுக கேமராக்களை உங்களுக்கு அடையாளம் காண்பித்துவிடும்.
நீங்கள் உங்களோடு கொண்டு செல்லும் வடிவிலும் இந்த “Spy camera Detector” கிடைக்கின்றன. உதாரணத்திற்கு பேனா வடிவிலும் கிடைக்கின்றன. இவற்றின் விலையும் மறைமுக கேமராக்கள் போல் $16 லிருந்து கிடைக்கிறது.
சில “Spy camera Detector” படங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



பேனாக்களில் Spy Camera Detector :-




Popularity: 4% [?]
தொடர்புடையவை :
இதுவரை நான் இந்த ப்ளாக்கில் நிறைய பதிவுகளை பதிந்திருக்கிறேன், ஆனால் இந்த பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த பதிவை படித்து முடிக்கு ...
உலகம் நவீனமயமாக்கலில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த வகையில் கிடைத்திருக்கும் நவீன படைப்பு தான் மறைமுக கேமராக்கள். ...
Antivirus Software என்பது அனைத்து Microsoft windows கணினிகளிலும் கட்டாயம் இருக்கப்பட வேண்டிய ஒன்று. Antivirus சாப்ட்வேர்கள் நமது கணினிகளை வைரஸ்கள ...
முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்கள், உலக தலைவர்கள், அறிஞர்கள், மாமேதைகள் பிறந்த தினம் போன்றவற்றை கூறும் வகையில் கூகுளின் முகப்பு சின்னம் (Logo) அடி ...
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...



எல்லோர் கையிலேயும் இந்த மாதிரி கேமரா கிடைச்சா அவ்வளவுதான் சரியா பயன்படுத்தறத விட, தப்பாதான் அதிகமாக பயன்படுத்துவாங்க!
அறிவியல் நன்மைக்கானதாக உண்டாக்குகிறது மனிதன் அதை தீமைக்கானதாக ஆக்குகிறான்.
[Reply]
its a useful one,but most of the people are used in wrong way……….
[Reply]
Saran R Reply:
January 11th, 2012 at 2:53 am
Yes, You are right, most of the people using it wrong way…
[Reply]