மழை பெய்வதை அறிய ஒரு இணையதளம்!

நம்ம ஊரில் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதனால், அதற்க்கேற்றாற் போல் ஒரு பதிவு.

பொதுவாக நம்ம ஊரில் மழை பெய்யும் என வானிலை அறிக்கை வந்தால், மழை பெய்யாது. மழை பெய்யாது என சொன்னால், மழை பெய்யும். இப்படியும் ஒரு வானிலை அறிக்கை உலகத்தில் வேறு எங்கும் இருக்காது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் ஊரில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் மழை பெய்கிறதா? இல்லையா? என கண்டறிய ஒரு இணையதளம் உண்டு என கேட்கும் போது ஆச்சர்யமாக இருக்கும் அல்லவா?. இந்த இணையதளத்தை முதலில் பார்க்கும் பொழுது அப்படி தான் இருந்தது எனக்கும். இணையதளமுகவரி : – http://isitraining.in

இந்த இணையதளத்தில் உலகின் எந்த நகத்திலும் மழை பெய்கிறதா?, இல்லையா என கண்டறிய, இந்த இணைய முகவரியின் பின் / குறிப்பிட்ட நகரின் பெயரை கொடுக்கவேண்டும். உதாரணத்திற்க்கு சென்னை என்றால், http://isitraining.in/chennai எனவும். மதுரை என்றால், http://isitraining.in/madurai என்ற பக்கத்திற்க்கு சென்றால் போதும். குறிப்பிட்ட நகரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறதா?, இல்லையா? என்பதை ஒற்றை வார்த்தையில் Yes (or) No என கூறிவிடும்.

ஒரே பெயர் கொண்ட இரு நகரங்கள் இருக்குமெனில், நகரத்தின் பெயரை தொடர்ந்து மாநிலத்தின் பெயரையும் கொடுக்கலாம். உதாரணத்திற்க்கு http://isitraining.in/Las-Vegas-New-Mexico.

உங்கள் கருத்துகளை comment ன் மூலம் தெரிவிக்கலாமே?!



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



6 Responses to “மழை பெய்வதை அறிய ஒரு இணையதளம்!”

  1. அருமையான பதிவு நன்றி

    [Reply]

    Saran R Reply:

    நன்றி திரு. முத்துவேல்,

    [Reply]

  2. selvakumar

    அருமையான cheythi

    [Reply]

    Saran R Reply:

    நன்றி. செல்வகுமார்

    [Reply]

  3. GOWRIBALAJI

    மதிப்பிற்குரிய சரண் அவர்களுக்கு

    நான் BSC.IT முடித்துள்ளேன் .நான் வீட்டில் இருந்து வேலை செய்யா வாய்ப்பு உள்ளதா.
    தயவு செய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பவும்.
    எனது மின்னஞ்சல் balaji.gowri@yahoo.com.

    [Reply]

    Saran R Reply:

    @கெளரிபாலாஜி,

    வாய்ப்புக்கள் நிறைய உள்ளன…ஆனால் அதில் எவை நீங்கள் அறிந்தது மற்றும் எவை சிறந்தது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும். கீழே இணைத்துள்ள பதிவை படித்தால் ஓரளவு உங்களுக்கு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

    http://saranr.in/inayathil-panam-sampathippathu-yeppadi-oru-munnottam/

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)