குறிப்பு :- தலைப்பை பார்த்து இந்த பதிவு உங்கள பத்தியோ இல்ல என்னை பத்தியோ இருக்கும்னு நினைக்கவேணாம்.
நமக்கு எதை பற்றியாவது தெரிய வேண்டுமெனில், உடனே நாம் செய்வது ஆன்லைனில் அதை தேடுவது தான். அவ்வாறு நாம் தேட நினைத்ததும் முதலில் வந்து நிற்பது கூகிள் தேடுபொறி. பொதுவாக தேடுபொறிகளில் குறிப்பிட்ட ஒரு தேடுதலுக்கு நிறைய இணையதளங்கள் போட்டி போட்டு வந்து நிற்க்கும். இவ்வாறு குறிப்பிட்ட தேடுதலுக்கு தங்களது இணையத்தை முதலிலோ அல்லது முதல் பக்கத்தில் கொண்டுவருவதற்க்கோ இணையதள உரிமையாளர்கள் கடும் போட்டி போட்டு கொண்டுள்ளனர். இதில் என்ன ஒரு சின்ன வருத்தம் என்றால், சில(பல) நேரங்களில் நாம் தேடும் தேடுதலுக்கு தொடர்ப்பில்லாத இணையதளங்கள் எல்லாம் கூட SEO (Search Engine Optimization) எனப்படும் கெட்டிகார தனத்தினால் முன்னே வந்து நிற்க்கும். (விளம்பரம்:- நானே பல இணையதளங்களுக்கு இவ்வாறு SEO செய்து கொடுத்துள்ளேன்). இதனால் சில நேரங்களில் தேடுதலுக்கு விடை கிடைக்காமலே போகிறது.
இதை தவிர்க்கவே கூகிள் போன்ற இணையதளங்கள், பொதுவான சில தேடுதலுக்கு அவர்களே விடையை கொடுத்து விடுவார்கள். உதாரணத்திற்க்கு (time, 1 euro in INR, weather bangalore, cricket score மேலும் சிலவற்றிற்க்கு கூகிள் தேடுதலில் சில ட்ரிக்ஸ்? பக்கத்தை பார்க்கவும்) போன்ற தேடுதலுக்கு கூகிளே தனது பக்கத்தில் விடையை கொடுத்து விடுவார்கள். இருப்பினும் மிக சில தேடுதலுக்கே கூகிளால் இதை செய்ய முடிந்தது. இந்த குறையை தீர்க்க, இப்பொழுது வந்துவிட்டது Wolfram Alpha. இந்த இணையதளத்தில் இதை போன்ற தேடுதலுக்கு உடனே விடை கிடைத்து விடும்.
Wolfram Alpha ல் கணிதம், நாட்கள், உலக வரைபடம், இயற்பியல், வேதியல், வானிலை, உணவு, வானியல், பூகோலம், பண்பாடு, மக்கள், கல்வி, கணினி, விளையாட்டு, இசை, வண்ணம், பணம், முதலீடு, ஆராய்ச்சி போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கும் உடனே விடை கிடைக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் நாட்கள் தொடர்பான உதாரணங்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
நாட்கள் :-
How many days until Labor Day?
holidays 2009
Which months have 31 days?
this month
time in Tokyo
8:25 am to 7:10pm
மேலும் சில :-
where am i
how many days until christmas
mother’s father’s sister’s daughter’s son
கணிதம் :-
சாதாரண கணக்கு
எண்கள்
அல்ஜிப்ரா
கால்குலாஸ்
ஜீயொமெட்ரி
annulus, inner radius=2, outer radius=5
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுத மறவாதீர்கள்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
நீங்கள் இணையத்தை பயன்படுத்துபவரானால், உங்களுக்கு தேவையான தகவல்களை தேடுபொறிகளில் (search engine) தேடி பெற்றிருப்பீர்கள், பெரும்பாலும் இந்தியாவி ...
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டிற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து ...
நீங்கள் மடிகணினி (Laptop) வைத்திருப்பவரானால் அதன் பை (Laptop bags) எவ்வளவு அவசியம் என்பதை அறிந்திருப்பீர்கள். உங்கள் மடிகணினி உடன் தரப்படும் பை (L ...
சமீபத்தில், கூகிள் தனது தனியுரிமை கொள்கைகளில் (Privacy Policy) சில மாறுதல்களை செய்துள்ளது. கூகிளின் 60 க்கும் மேற்ப்பட்ட இணைய சேவைகளுக்கு தனி தன ...
உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இது ஒரு எளிய வழி. இதன் மூலம் உங்கள் கூடுதல் செலவிற்கு தேவையான பணத்தை நீங்கள ...



தங்கள் பதிவுகளில் இணைக்கப்படும் Youtube வீடியோக்கள் Auto Play ஆகுவதால் வீடியோ இனைக்கப்பட்ட பதிவைப் படிப்பது வாசகர்களுக்கு சிரமம். இதனை சரி செய்யவும்.
http://saranr.in/kaniniyil-velai-seipavarkalukkaka/
[Reply]
Saran R Reply:
September 29th, 2010 at 8:00 am
உங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி நண்பரே, இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்கிறேன்.
[Reply]
your website is usefull for all. but i have little bit knowladge in english. please refer same information in tamil website
[Reply]
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுல்லதாக உள்ளது. உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
[Reply]
Saran R Reply:
November 29th, 2011 at 1:52 am
நன்றி தினேஷ்.
தொடர்ந்து படியுங்கள்!
[Reply]