உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் சம்பாதிப்பது எப்படி?

உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இது ஒரு எளிய வழி. இதன் மூலம் உங்கள் கூடுதல் செலவிற்கு தேவையான பணத்தை நீங்கள் சம்பாதிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால் இது ஒரு வேடிக்கையான வழியும் கூட. இவ்வாறு சம்பாதிக்க உங்களின் ஓய்வு நேரமே போதுமானது. சில நிமிடங்கள் அல்லது ஒரு சில மணி நேரம் தேவைப்படலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் சம்பாதிக்க முடியும் என்றவுடனே உங்கள் மனதில் சில கேள்விகள் தோன்றியிருக்கலாம். என் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் எப்படி சம்பாதிக்க முடியும்?. என் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவது யார்?. அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?. இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றியிருக்குமேயானால் விடைகாண தொடர்ந்து படியுங்கள்.

மிக பெரிய சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்கள் தீவிரமாக, நுகர்வோர் தேவை என்ன? என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தையில் புதிய தயாரிப்புகளை கொண்டுவரவும் ஏற்கனவே அவர்கள் கொண்டுவந்த தயாரிப்புகளின் மதிப்பு அதை பற்றி மக்களின் எண்ணத்தையும் அறியவும் விரும்புகிறார்கள். இதை மேற்கொள்ளும் சந்தை ஆராய்ச்சிகாகவே (market research)  ஒரு பெரும் முதலீட்டை செய்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு அதில் ஒரு பெரிய முட்டுகட்டையுள்ளது. அது எப்படி உங்களை (அதாவது நுகர்வோரை) அடைவது என்பது தான். அது அவ்வளவு சுலபமில்லை. அதனால் அவர்கள் தங்கள் தயாரிப்புகளை பற்றி நுகர்வோர் என்ன நினைக்கிறார்கள் என அறியவும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான பொருட்கள் விற்பனைக்கு வர வேண்டும் என நுகர்வோர் விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும் ஆய்வு நிறுவனங்களை (Survey Companies) நாடுகின்றனர்.

இதை போன்ற ஆய்வு நிறுவனங்களின் (Survey Companies) இணையதளங்களில் பதிவு செய்து கொள்வதன் மூலம் நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவித்துக்கொள்ளமுடியும்.

இதை போல் ஆய்வு நிறுவன இணையதளங்களில் சேர்வதன் மூலம் சில சுவாரஸ்யங்களையும் அனுபவிக்க முடியும். உதாரணத்திற்க்கு, ஒரு தயாரிப்பு, (Product) கடைகளில் கிடைக்கும் முன்பே அதை பற்றி முழுவிவரங்களும் தெரிய பெற்றிருக்கலாம் அல்லது ஒரு கணினி விளையாட்டு மென்பொருள் (Computer Game Software) வெளி வருவதற்க்கு முன்பே அதை பற்றி தெரிந்துகொள்ள விளையாடி பார்க்க நேரிடலாம் அல்லது ஒரு திரைப்படம் வெளிவருவதன் முன்பே அதன் முக்கியமான காட்சிகளை பார்த்து அதற்க்கு கருத்துக்களை தெரிவிக்கவேண்டி வரலாம். எல்லாவற்றையும் விட இதை செய்வதற்கு உங்களுக்கு பணம் கிடைக்கபெறுவீர்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

உங்களிடமிருந்து (நுகர்வோர்) தேவையான தகவல்களை மற்றும் கருத்துக்களை பெற ஒரு நிறுவனத்தின் அதிவேக மற்றும் எளிதான வழி தான் இந்த சர்வே முறை. மற்ற நுகர்வோர் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பெறும் முறைகளை காட்டிலும் இந்த முறையே சிறந்தது மற்றும் செலவு குறைவானது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் உண்மை.

எனவே கணக்கெடுப்புகள் (Survey) ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அதன் பிழைப்பிற்க்கும் (survival) அவசியமானதாக இருக்கிறது. இது நிறுவனங்களுக்கும் தெரியும் எனவே தான் அவர்கள் உங்கள் கருத்திற்க்கு தகுந்த சன்மானம் அளிக்க தயாராக உள்ளனர். உங்கள் கருத்துக்களை தெரிவிக்க நீங்கள் தயாரா?.

சரி, இதை போல் சர்வேக்களில் பங்கெடுக்க நீங்கள் தயாரானதும் உங்கள் முன்னிருக்கும் பெரிய கேள்வி எப்படி அந்த பெரிய நிறுவனங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பி பயன் பெறுவது என்பதாக தான் இருக்கும்.

அதற்க்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது சரியான இணைய சர்வே நிறுவங்களை தேடி தேர்ந்ந்தெடுப்பது தான்… இதற்க்கு சிறந்த வழி, கருத்துக்களுக்கு அதிகம் பணம் தரும் சர்வே நிறுவனங்களை அடையாளப்படுத்தி காண்பிக்கும் சங்கங்களை (survey clubs) தெரிந்துகொள்வது தான். மேலும் தேடுபொறிகள் (Search engines) உங்களுக்கு சிறந்த சர்வே நிறுவங்களை தேட கை கொடுக்கலாம்.

சார்வே (survey) மூலம் சம்பாதிக்க விரும்புவோர் கேட்கும் பொதுவான சில கேள்வி பதில்களுடன் :-

சர்வே (survey) மூலம் எனது கருத்துக்களை தெரிவித்து சம்பாதிப்பது கடினமானதா?
உண்மையில் இல்லை. உங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்க நேரமும் அதை தொடர்ந்து செய்யும் குணமும் இருந்தால் போதும்.

இது எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் முதலில் சர்வே இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும். பிறகு உங்களது இமெயிலிற்க்கு வரும் சர்வே பற்றிய இமெயிலை படித்து அதிலுள்ள சர்வேவிற்க்கு உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இதை செய்வதன் மூலம் இதிலிருந்து கணிசமான அளவு சம்பாதிக்க முடியும்.

இதிலிருந்து எவ்வளவு சம்பாதிக்க முடியும்.?
நீங்கள் மேற்கொள்ளும் ஒரு சர்வே அல்லது சந்தை ஆராய்ச்சிக்கு கிடைக்கப்பெறும் பணத்தை திர்மானிக்க நிறைய காரணிகள் உள்ளன. உதாரணத்திற்க்கு எந்த நாட்டை சேர்ந்தவர் நீங்கள் என்பதை பொறுத்து மற்றும் எந்த சர்வே இணையத்தில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து மற்றும் ஒரு சர்வேக்கு பதில் அளிக்க எடுத்து கொள்ளப்படும் நேரம் எவ்வளவு ஆகும் என்பதை பொறுத்து இவை தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் நான் பார்த்தவரையில் ஒரு சர்வேயிற்க்கு $1 முதல் $10 வரை தரும் நிறுவனங்கள் உள்ளன.

சர்வே (survey) எப்பொது வேண்டுமானாலும் பூர்த்தி செய்யலாமா?
நிச்சயமாக. ஆனால் நீங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும், அது மற்றவர்களும் உங்களுடன் போட்டி போட்டு கொண்டு சர்வேக்களுக்கு பதில் அளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான். ஆம், ஒவ்வொரு சர்வேயும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை நுகர்வோரின் கருத்துக்களை கேட்வே விரும்பும். அந்த எண்ணிக்கை முடிவதற்க்குள் உங்கள் சர்வேவிற்கான கருத்தை தெரிவிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்க.

இதை தவிர சர்வே கருத்தளிக்க தெரிந்து கொள்ள வேண்டியது?

சர்வே மூலம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து சம்பாதிக்க ஒரு புதிய இமெயில் கணக்கை தொடங்கி கொள்ளுங்கள். ஏனெனில் சர்வேவிற்காக அனுப்பப்படும் இமெயிலினால் உங்கள் இன்பாக்ஸ் நிரம்ப வாய்ப்புண்டு.

சரியான சர்வே இணையத்தில் தேர்ந்தெடுப்பது எப்படி?

நான் முன்பே சொன்னதை போல, கருத்துக்களுக்கு அதிகம் பணம் தரும் சர்வே நிறுவனங்களை அடையாளப்படுத்தி காண்பிக்கும் சங்கங்களை (survey clubs) தெரிந்துகொள்வது தான். மேலும் இணையத்தில் திவிர தேடுதல் (Google Search) உங்களுக்கு சிறந்த சர்வே நிறுவங்களை தேட கை கொடுக்கும்.

இருப்பினும் நான் தேடியதில் கிடைக்கப்பெற்ற சில இணையதளங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். ஒவ்வொன்றிற்க்கும் அதற்கே உரிய வழிமுறைகளும் பின்பற்றல்களும் உள்ளன. எனவே ஒரு இணைய தளத்தில் சேர்வதற்க்கு முன் அதன் Terms & Condition மற்றும் அவர்களின் Frequently Asked Questions (FAQ) போன்றவற்றை படித்துவிடுங்கள். மேலும் அவர்களை பற்றிய ஆய்வுகளை தேடியந்திரம் (Search Engines) மூலம் தேடி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

உங்கள் கருத்துக்களை சர்வேவில் தெரிவிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என்ற இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே comment பகுதில் தெரிவிக்கலாம். ஆனால் அதற்க்கு பணம் கேட்டுவிடாதீர்கள்?!  :)

இணையத்தில் சம்பாதிக்க மேலும் பல வழிகளை தெரிந்து கொள்ள, இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற பதிவை பார்க்கலாமே?…



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



21 Responses to “உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் சம்பாதிப்பது எப்படி?”

  1. Anbarasu Annamalai

    நல்லாத்தான் இருக்கு. நானும் முயற்சி செய்கிறேன். நன்றி.

    [Reply]

    Saran R Reply:

    நல்லாத்தான் இருக்கும்…
    :)

    [Reply]

  2. விரிவான விளக்கம். நானும் முயற்சி செய்கிறேன்! நன்றி நண்பரே!

    [Reply]

  3. k.shakunthaladevi

    நல்லதான் இருக்கு ட்ரை பண்ணுகிறேன். இது போல் நெறய ஐடியா சொல்லவும். என் குழந்தைகளுக்க நெறய சம்பாரிக வேண்டும். நன்றி.

    [Reply]

  4. நன்றி நண்பா

    [Reply]

  5. Dear sir,
    I have checked the mentioned survey sites, they are all for US people only.Not for indians.
    The ipaneliadia site is the only site for Indian people,kindly advise the survey sites for Indian people.

    Thank you.
    Karthikeyan

    [Reply]

    Saran R Reply:

    Hi Karthikeyan,

    i think last 5 sites in this list accept indians.. please check and let me know…. anyway I am not participating any survey methods…

    Saran

    [Reply]

  6. selvaraj

    மிக்க நன்றி

    [Reply]

  7. N.Vijay

    உலக தமிழர் உயர்வுக்கு நல்ல செய்தி

    [Reply]

  8. sathyaraj

    இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி படித்து எல்லோரும் சம்ப்திக்கனும்னு நினைக்கிற உங்களுக்கு thanks a lot….

    [Reply]

  9. hmmm…….Useful information,thank you…………

    [Reply]

  10. kalyani.M

    என்னைப் போன்ற வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிக்கு மிகவும் பயனுள்ள குறிப்பு. மிகவும் நன்றி.

    [Reply]

    Saran R Reply:

    நன்றி, தொடர்ந்து படியுங்கள்!!!

    [Reply]

  11. lurismary

    நன்றி ser! நம்ம லைபுக்கு உபயோஹமா இருக்கும் நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிங்க ரொம்ப ரொம்ப நன்றி

    [Reply]

  12. நல்ல பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்

    [Reply]

  13. Venugopal

    கற்றல்+g

    [Reply]

  14. Venugopal spd ( Vg )

    இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி படித்து எல்லோரும் சம்ப்திக்கனும்னு நினைக்கிற உங்களுக்கு தேங்க்ஸ்,,,,

    [Reply]

  15. Venugopal spd ( Vg )

    இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி படித்து எல்லோரும் சம்ப்திக்கனும்னு நினைக்கிற உங்களுக்கு தங்கேஸ்

    [Reply]

  16. bhavani

    ஹாய் சரண் சார்

    உங்க வெப்சைட் சூப்பர். வெரி ப்ரில்லியன்ட் வொர்க்.
    நான் ரொம்ப நாளா ஒரு வெப்சைட் உருவகானுமு முயிற்சி செஞ்சுட்டு இருக்கேன் . ஆனா எப்படி அதிகமான டிராபிக் உருவகனுமு தெரியல. ப்ளீஸ் ., எதாவது அட்வைஸ் பண்ணுங்களேன்.

    [Reply]

  17. azhar

    thanks

    [Reply]

  18. manokar

    Thanks friend.

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)