நாம் பொதுவாக வலைப்பதிவுகளில் comment என்ற ஒன்றை அறிந்திருப்போம். நீங்கள் இதுவரை படித்த பதிவுகளுக்கு அவ்வப்பொழுது comment செய்திருப்பீர்கள் அல்லவா?. அவ்வாறு ஒவ்வொரு முறையும் நீங்கள் comment எழுதி அதை பதிவு செய்தவுடன் உங்கள் comment உடன் உங்கள் புகைப்படம் வர வேண்டிய இடத்தில் வெறும் மனித உரு படம் வருவதை பார்த்திருக்கலாம். ஆனால் சிலர் comment செய்யும் பொழுது அவர்கள் புகைப்படமோ அல்லது வேறு படமோ வருவதை கவனித்திருப்பீர்கள். இவ்வாறு எப்படி உங்கள் புகைப்படத்தையும் வர செய்வது? என்பதை விளக்கவே இந்த பதிவு.
Gravatar என்ற இணையதளம் பதிவுலகில் மிக பிரபலம். இந்த இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு ஒரு புகைப்படத்தை நாம் set செய்துவிட வேண்டியது தான் நம் வேலை. பிறகு நாம் எந்த இணையதளத்தில் இந்த குறிப்பிட்ட இமெயில் முகவரியை கொடுத்து comment செய்தாலும் நாம் set செய்த நமது அவதார் (avatar) புகைப்படம் வந்துவிடும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென்ற விளக்க ஒளித்திரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Gravatar ல் நமது புகைப்படத்தை set செய்வது எப்படி?
1. Gravatar.com ஐ திறந்து கொள்ளவும்.
2. மேலே navigation bar ல் உள்ள Log in/ sign up ல் sign up ஐ கிளிக் செய்யவும்.
3. Signup to get your own gravatar என்ற பக்கம் வரும். அதில் உங்களது இமெயில் முகவரியை கொடுத்து sign up செய்யவும்.
4. குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு கடவுச்சொல் (password) ஒன்று அனுப்பப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி Gravatar.com ல் உள் நுழையவும் (login).
5. my account என்ற menu வில் Add an Image என்ற லிங்கை கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்களுக்கான அவதாரை தரவேற்றம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தகுந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் அவதாரை set செய்யவும்.
6. இப்பொழுது உங்கள் இமெயில் முகவரிக்கு இணைய அடையாளம் கிடைத்து விட்டது.
7. குறிப்பிட்ட இமெயிலை முகவரியை பயன்படுத்தி கீழே comment செய்து பார்க்கவும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
இதுவரை நான் இந்த ப்ளாக்கில் நிறைய பதிவுகளை பதிந்திருக்கிறேன், ஆனால் இந்த பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த பதிவை படித்து முடிக்கு ...
கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட ...
நமது கணினியின் தட்டச்சு பலகையில் விண்டோஸ் பொத்தான் (button) என்ற ஒன்றை பார்த்திருப்போம். ஆனால் அதை நம்மில் பலர் பயன்படுத்துவதே இல்லை. உண்மையில் இ ...
இணையத்தில் நாம் தினமும் நிறைய இணையதளங்களை பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் இணையதளங்கள் வந்த வண்ணம் உள்ளன. கோடிக்கணக்கான இணையதள முகவரிக ...
பச்சை திரை தொழில்நுட்பம் (Green screen technology), இதை நீங்கள் கேள்விபட்டிருக்கிறிர்களா?. இந்த பச்சை திரை தொழில்நுட்பத்தை கேள்விபட்டிருக்கிறிர்கள ...



தகவலுக்கு நன்றி! நண்பரே இதுவும் நாம் நம் கூகுள் புரொஃபைலில் தரும் புகைப்படம் போன்றது தானே! இல்லை ஏதாவது வித்தியாசம் உள்ளதா!
[Reply]
Saran R Reply:
August 23rd, 2010 at 2:08 pm
@எஸ்.கே
//////////////தகவலுக்கு நன்றி! நண்பரே இதுவும் நாம் நம் கூகுள் புரொஃபைலில் தரும் புகைப்படம் போன்றது தானே! இல்லை ஏதாவது வித்தியாசம் உள்ளதா! ///////////////////
வித்தியாசம் உள்ளது நண்பா, கூகிள் ப்ரொஃபில் வெறும் கூகிள் சார்ந்த பயன்பாட்டிற்க்கு மட்டுமே. ஆனால் இது இணையத்திலுள்ள பெரும்பாலான இடங்களில் பயன்படுகிறது.
[Reply]
Saran R Reply:
August 23rd, 2010 at 2:11 pm
@எஸ்.கே
தயவு செய்து உங்கள் இமெயிலிற்க்கு ஒரு புகைப்படத்தை செட் செய்யுங்கள். உங்களுக்கேன தனி அடையாளம் கிடைக்கலாம்.
[Reply]
எஸ். கே Reply:
August 23rd, 2010 at 2:16 pm
நிச்சயம் செய்கிறேன்!
[Reply]
Saran R Reply:
August 24th, 2010 at 2:09 am
உங்கள் gravatar சூப்பர்!!!
சிரமத்திற்கு மன்னிக்கவும். Testing my gravatar
[Reply]
ஹாய் சரண்,
now a days i dint receive any mail copy form u, i dont know why, When i register again it is saying already my mail mail registered with saran
[Reply]
SaranR Reply:
November 2nd, 2010 at 3:18 am
@ஹாய் அண்ணா,
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இப்பொழுது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் உங்களுக்கு இமெயில் கிடைத்திருக்காது. இப்பொழுது மீண்டும் கிடைக்க பெறுவீர்கள் என நம்புகிறேன்.
என்றும் உங்கள் அன்பிற்க்கு ”சரண்” அடைந்தவன்.
[Reply]
டெஸ்டிங் மை அட்ரஸ்
[Reply]
சார் !
விண்டோஸ் டி பற்றிய என் கமெண்டில் படம் தெரியாமல் போக காரணம் நான் வேறு மெயில் ஐடியை உபயோகித்ததுதான். இந்த மறுமொழிக்கு படம் தெரியும் .
ஆமா உங்களுக்கு மறுமொழி போட கூகுல் ட்ரான்ஸ்லிட்டரேட்டரை வச்சிருக்காப்ல இருக்கு. இடையில ஆங்கிலம் டைப் பண்ணா அதுவும் தமிழா மாறுதே..
[Reply]
Saran R Reply:
December 19th, 2011 at 7:20 am
இல்லையே சார், தெரியலையே? பாருங்க
///// ஆமா உங்களுக்கு மறுமொழி போட கூகுல் ட்ரான்ஸ்லிட்டரேட்டரை வச்சிருக்காப்ல இருக்கு. இடையில ஆங்கிலம் டைப் பண்ணா அதுவும் தமிழா மாறுதே.. ///
தமிழில் comment போடுறதுக்கு வசதியா இருக்கும்னு தான் வைத்தேன். Ctrl+G ஒருமுறை செய்தால் ஆங்கிலத்திலும், மறுமுறை செய்தால் தமிழுக்கும் மாறிவிடும்.
[Reply]
Thank u,,,,,,,,,,,
ur post is very useful and informative……
[Reply]