சில நேரங்களில் வீடியோவில் வரும் ஒலி (sound) சரியாக பொருத்தமற்றதாக இருக்கும். உதாரணமாக திரையில் வரும் நபர் பேசி முடித்தப்பின் தான் நமக்கு பேச தொடங்கும் ஒலி கேட்கும் அல்லது திரையில் பேச தொடங்கும் முன்னரே நமக்கு ஒலி வந்து சேர்ந்து விடும். பெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் (Download) செய்யப்பட்ட வீடியோக்களில் இந்த பிரச்சனைகள் இருக்கும். இத்தகைய வீடியோக்களை நாம் ஓரு நிமிடம் கூட பார்ப்பதில்லை. மாறாக இதற்க்கும் ஒரு தீர்விருந்தால் எப்படி இருக்கும்?. இப்பிரச்சனைக்கான தீர்வு இந்த பதிவில் விளக்கியுள்ளேன்.
இத்தகைய ஒலி பிரச்சனையை சரி செய்ய முதலில் உங்களுக்கு VLC media Player தேவை. VLC Media Player ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும். இந்த ஒலி பிரச்சனையை சரி செய்ய ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டுமா? என நீனைக்கிறீர்களா?. அப்படியானால் உங்களுக்கு VLC Media Player பற்றிய இன்னுமொரு தகவல் இந்த VLC media player ல் அனைத்து வகையான format வீடியோக்களையும் பார்க்க முடியும். உதாரணத்திற்கு DVDs, (S)VCDs, Audio CDs, web streams, TV cards, mp4, mp3, avi மற்றும் 3gp போன்ற அனைத்து வகை format வீடியோக்களையும் பார்க்கலாம். எனக்கு தெரிந்து வேறேந்த மென்பொருளிலும் இது சாத்தியமில்லை.
VLC Media Player ல் ஒலி சரியாக பொருந்த செய்வது எப்படி?
- எந்த வீடியோவின் ஒலி பொருத்தம் செய்ய வேண்டுமோ அதை VLC media player ல் திறந்து கொள்ளவும்.
- Menu வில் Tools->Track Synchronization க்கு செல்லவும்.
- அது புதிதாக இன்னொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும். Synchronization என்ற பத்தியை தேர்வு செய்யவும்.
- கீழுள்ள படத்தை போல் உங்கள் பக்கம் தோன்றும்.

- கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் வீடியோவில் வரும் ஒலியை முன்/பின் வருமாறு மாற்றி அமைக்கலாம்.
- 0.000 s என்பது மாற்றியமைக்கப்படாத ஒலியாகும். உங்கள் தேவைக்கேற்ப வீடியோவில் ஒலியின் வேகத்தை மாற்றிக்கொள்ளவும்.
- இவ்வாறு உங்கள் வீடியோவில் ஒலி பொருந்தும் வரை செய்ய வேண்டும்.
இதே போல் உங்கள் வீடியோவில் வரும் SubTitle ன் வேகத்தையும் மாற்றி அமைத்து கொள்ளமுடியும்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
என்னை பொருத்தமட்டில் Wordpress தான் ப்லோக்கிங் (blogging) செய்பவர்களுக்கு சிறந்த ஒரு மேடை(platform). Wordpress 3.0 காக காத்திருந்த வலைபதிவர்கள் (b ...
அனைத்து இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் (email service provider) இணைப்பு கோப்புகளுக்கான (attachment size) அளவை கட்டுபடுத்தி வைத்துள்ளனர். ஜிமெ ...
சோசியல் மீடியா இணையதளங்கள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், அதற்கான எதிர்ப்புக்களும் நிறைய வந்த வண்ணமுள்ளன. இந்தியாவை பொருத்தவரை சோசியல ...
நாம் புகைப்படங்களை கொண்டு Video Slideshow உருவாக்க நினைப்பதுண்டு. திருமணம், சுற்றுலா மற்றும் நினைவுக்கூறு புகைப்படங்கள் போன்றவற்றை கொண்டு நினைவுகள ...
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...



உங்கள் விளக்கங்கள் இன்னும் விரிவாய் எதிர்ப்பார்த்தேன் சரன் சார். VLC கொண்டு தற்காலிகமாக நிகழ்-நேர அனுபவம் மட்டுமே தரும். இதனை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும். விரைவில், அதற்கொரு விளக்கவுரை கொடுங்கள்
[Reply]
windows media player classic could also play almost all type of media. forgot?
[Reply]
Saran R Reply:
July 6th, 2010 at 3:04 am
நன்றி திரு வினோ, நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவிற்கு நன்றி.
/ விண்டொஸ் மிடியா பேலயரிலும் அனைத்து வித வீடியோக்களையும் பார்க்க இயலும் என்பது ஒரு நல்ல தகவல் /
[Reply]
ravi Reply:
July 6th, 2010 at 6:24 pm
இட்’ச வெரி ஹெல்ப்புள் டு மீ தங்க யு
[Reply]
Saran R Reply:
July 7th, 2010 at 2:50 am
உங்கள் மறுமொழிக்கு நன்றி திரு ரவி
mplayer பற்றி தங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறன் . http://www.mplayerhq.hu/ .
mplayer is also an open source video player. This can do everything like vlc.
[Reply]
உங்கள் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கிறது. வாழ்த்துகள்.
[Reply]
மிக அருமை சார்.
very குட் போஸ்ட்
தங்க யு .
[Reply]
Saran R Reply:
September 16th, 2010 at 12:37 pm
நன்றி திரு முத்துவேல்
[Reply]
அருமை
[Reply]
அன்பு நண்பருக்கு நன்றி !
[Reply]
அன்பு நண்பருக்கு நன்றி ! தட்டச்சு மூலம்
தமிழும் தட்டச்சு செய்ய இயலும் என்பது இந்த முறையானது சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது
[Reply]
Saran R Reply:
December 20th, 2011 at 5:42 pm
நன்றி ஜெகன்நாதன்,
[Reply]
தேங்க்ஸ்
[Reply]