இந்தியாவில் கூகிள் தடை செய்யப்படுமா?

சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் கூகிள் மற்றும் யாகூ போன்ற இனையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது என எழுதி இருந்தேன். இப்பொழுது இந்தியாவில் கூகிள் தடை செய்யப்படுமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. சில மாததிற்கு முன்பே Google Ads இல் சில தவறான வார்த்தைகள் கொண்டு விளம்பரங்கள் வருவதாக கூறி, இந்திய அரசியல் தலைவர் ஒருவர் கூகுள் இனையத்திற்கு தடை விதிக்க வலியுருத்தினார். கூகிள், பிறகு Google Ads இல் அதற்கேன தனி கவனம் செலுத்தி வருகிறது.

இந்த முறை இந்திய அரசாங்கம் RIM(research in motion), Google மற்றும் Skype போன்ற வெளிந்நாட்டு நிறுவனங்களின் தகவல்களை பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை படிக்கும் படி (readable format)அமைக்குமாறு வலியுருத்தியுள்ளது. DoT எனப்படும் The Department of Telecom இதற்கு 15 நாட்கள் கேடுவாகவும் விதித்துள்ளது. மீறினால் இந்நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கும் அபாயம் காத்திருக்கிறது. மேலும் உளவுத்துறை Tata Teleservice மற்றும் Reliance Communications நிறுவனங்களின் சேவைகளை பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் கூகிளின் செய்தி தொடர்பாளர், இதுவரை தாங்கள் இந்திய அரசாங்கத்தால் இந்த விவகாரத்திற்காக தொடர்பு கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டால் நிச்சயம் பதில் அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கூகிள் நிறுவனம் அவர்களின் ஜீமெயில் சேவை தகவல்கள் (data readable) படிக்கும் படி தான் இருக்கிறது என்பதை உறுதிபடுத்த அழைக்கப்படலாம் என செய்திகள் வருகிறது.

ஒரிரு நாட்களில் இதைப் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கப்பெறுவோம் என நம்புகிறேன்.

பொறுத்திருந்து பார்ப்போம்.?!



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



2 Responses to “இந்தியாவில் கூகிள் தடை செய்யப்படுமா?”

  1. கூகிள் முழுதுமா? அல்லது கூகிள் அட்சென்ஸ் மட்டுமா? கூகிள் முழுதும் தடை செய்தால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் தவிக்க நேரிடுமே..??

    [Reply]

    Saran R Reply:

    சரியாக சொன்னீர்கள் திரு. வினோ,

    ஆனால் இது ஜிமெயில் பற்றிய சர்ச்சையாக தான் தெரிகிறது.

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)