கூகிளின் வீடியோ பகிர்வு தளமான யூடியுபில் (Youtube) தினசரி 4 பில்லியன் ஆன்லைன் வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. மேலும் இப்போது சராசரியாக கிட்டத்தட்ட 60 மணி நேர வீடியோ ஒவ்வொரு நிமிடமும் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என அந்நிறுவனம் நேற்று அறிவித்ததுள்ளது.
அந்நிறுவனம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், “நீங்கள் பார்க்கும் மற்றும் பதிவேற்றும் வீடியோக்களின் கணக்கில் யூடியுப் ஒரு மாபெரும் சாதனை புரிந்துள்ளது. யூடியுப்பில் தினசரி 4 பில்லியன் வீடியோக்கள் பார்க்கவும், சராசரியாக 60 மணி நேரம் வீடியோ ஒருநிமிடத்திற்க்கு பதிவேற்றவும் படுகிறது. இது கடந்த எட்டு மாதங்களில் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை, இதை நீங்கள் மென் மேலும் வளர வைத்துக்கொண்டேயுள்ளீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் வீடியோ பகிர்விற்க்கு காரணம் கூகிள் தரமான வீடியோக்களுக்கு முன்னுரிமை கொடுக்க எடுத்துவரும் முயற்சிகள் தான். கடந்த செப்டம்பரில், யூடியுப் ஒரு அறிவிப்பை வெளியீட்டது, அதன் படி, ஃபேஷன், விளையாட்டு மற்றும் இசைக்கென பிரதான வீடியோ அலைவரிசைகளை உருவாக்குவதென முடிவெடுத்தது. மேலும் கூகிள் யூடியுப்பின் புதிய பதிப்பை கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்தது. இதனால் பயனாளர்கள் புதிய விடியோக்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னை பொருத்தமட்டில், இத்தகைய கூகிளின் முயற்சிகளே யூடியுப்பின் இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது.
இதைப்பற்றிய யூடியுப்பின் வீடியோ தொகுப்பை கீழே காணலாம்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
இணையத்தில் சென்ஸாருக்கு வாய்ப்பேயில்லை என கூகுளும் பேஸ்புக்கும் மாறி மாறி கூறிவரும் நிலையில் டிவிட்டர் தானாக முன் வந்து இந்தியாவில் சென்ஸாருக்கு ந ...
கூகிள் Women Entrepreneurs on the web (WEOW) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு சுயதொழில் புரியும் பெண்களுக்கு தங்களது தொழில் நிறுவன ...
விவசாயிகள் மின்சார தட்டுபாடு, காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, விலைச்சலுக்கெற்ப விலைநிர்ணயம் இன்மை மற்றும் இடைதரகர்கள் போன்ற பல இன்னல்கள ...
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாணயங்களை வெளியிட்ட நாடுகளில், இந்தியவிற்கு ஒரு தனி சிறப்புண்டு. ஆனால் அமெரிக்க ($), ஜப்பான்(¥) போன்றவற்றிற்க்கு இருப ...
சில நாட்களுக்கு முன் தான் சமூக வலைதளங்களுக்கு தணிக்கை தொடர்ப்பான காரசார விவாதங்கள் நடந்து வந்தன. அதன் புதிய திருப்பமாக சமூக வலைதளங்களுக்கு தணிக்கை ...


